இறுதி ஆட்டத்தை திருப்பிப் போட்ட சூர்யகுமார் யாதவின் கேட்ச் - சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்த வீடியோ!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவின் பிடியெடுப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்த வீடியோ
உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
குறித்த போட்டியில் எந்த அணி வெற்றிப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே அதிகரித்த வந்த நிலையில், இந்திய அணி வெற்றிப் பெற்றது.
தென்னாபிரிக்க அணி வெற்றி பெற இறுதி ஓவருக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய முதல்பந்தை டேவிட் மில்லர் (David Miller) லோங் - ஆஃ (Long-off) திசைக்கு அடித்தார்.
கிட்டத்தட்ட 6 ஓட்டங்களை நோக்கி சென்ற பந்தை துல்லியமாக தடுத்து நிறுத்தினார் சூர்ய குமார் யாதவ்.
பும்ரா (Bumrah), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த நிலையிலும், குறித்த பிடியெடுப்பே, இந்திய அணிக்கு கிண்ணத்தை பெற்றுக்கொடுத்ததாக இந்திய ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் ஒரு சில தரப்பினர் பிடியெடுப்பின் போது சூர்யாவின் கால், பௌண்டரி எல்லைக்கோட்டை தொட்டதாக பேசப்படுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில் தெளிவான ஒரு பிடியெடுப்பு எனவும் மூன்றாம் நடுவரின் தீர்மானம் துல்லியமானது எனவும் அறியமுடிகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |