உலகக் கோப்பை டி20 தொடர் எப்போது? வெளியான அறிவிப்பு: உச்சகட்ட மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
உலகக் கோப்பை டி20 தொடர் துவங்கும் திகதி மற்றும் எங்கு நடைபெறப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடர், கொரோனா பரவல் காரணமாக மாற்றப்பட்டது. ஆனால், அது எங்கு நடைபெறும்? எப்போது? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்தது.
இந்நிலையில், பிரபல விளையாட்டு ஊடகம் ஒன்று, உலக்கோப்பை டி20 தொடர், வரும் அக்டோபர் 17-ஆம் திகதி துவங்கி, நவம்பர் 14-ல் இறுதிப் போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
T20 World Cup 2021 is set to start days after the IPL final, which is likely to be held on October 15 ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 25, 2021
DETAILS ? https://t.co/u8W20mvj0z pic.twitter.com/B4wQrb1wSx
அதாவது, இந்தியாவில் நடக்கவேண்டிய டி20 உலக கோப்பை தொடர் கொரோனா இரண்டாவது அலை காரணமாக துபாய் அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூ ஜெனிவா ஆகிய நாடுகளுக்கு இடையில் இரண்டு பிரிவாக பிரித்து நடைபெறும்.
இதில் முதல் நான்கு இடத்தில் முன்னேறும் அணிகள் டாப் 8 டி20 அணிகளுடன் சேர்த்து சூப்பர் 12 சுற்று நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.