டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை புரட்டிப்போட்ட வெஸ்ட் இண்டீஸ்: 30 ஓட்டங்களில் அபார வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதல்
டி20 உலகக் கோப்பையின் 15 வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
JAS-ON THE CHARGE! 💥
— Star Sports (@StarSportsIndia) February 11, 2026
Power on display from Jason Holder as West Indies finish strong against England! 👊
ICC Men’s #T20WorldCup | #ENGvWI | LIVE NOW 👉 https://t.co/GuO9vjphmZ pic.twitter.com/FqdfWEanMG
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ரூதர்போர்டு 42 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தார். ரோஸ்டன் சேர் 34 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
ENG vs Wi T20🚨🔥🤩
— Sports Center (@PahadiB80430845) February 11, 2026
England need 66 runs in 35 balls#ENGvsWI #ICCMensT20WorldCuppic.twitter.com/nxGdbKNjOL
197 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவிலேயே 166 ஓட்டங்கள் மட்டும் குவித்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 33 ஓட்டங்களும், பிலிப் சால்ட் 31 ஓட்டங்களும் குவித்தனர்.
கடைசி வரை அணியை மீட்க போராடிய சாம் கர்ரன் 43 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் குடகேஷ் மோடே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |