மொயின் அலி அரைசதம்: நியூசிலாந்துக்கு 167 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
டி20 உலக கோப்பை அரை-இறுதியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 166 ஓட்டங்களை எடுத்துள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.
தொடக்கவீரர் பேர்ஸ்டோ 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆடம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், பவர்-பிளே முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்கள் எடுத்தது.
எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 29 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மலான் மற்றும் மொயின் அலி ஜோடி சிறப்பாக விளையாடியது. மலான் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 1 சிக்சர் 1 பவுண்டரியுடன் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
மொயின் அலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்நிலையில், 167 ஓட்டங்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.