பட்டையை கிளப்பிய பட்லர்! தொட்டாலே பவுண்டரி தான்., 12 ஓவரில் அவுஸ்திரேலியாவுக்கு ரெஸ்ட் கொடுத்த இங்கிலாந்து
துபாயில் இன்று நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 8 விக்கட் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
டி20 உலகக்கோப்பை 2021 தொடரில் குரூப்-1ல் இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் அவுஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
Picture: Twitter @englandcricket
அவுஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பஞ்சுவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் மட்டுமே 44 ஓட்டங்கள் எடுத்திருந்தார். வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் என நட்சத்திர வீரர்கள் ஒற்றை எண்ணைக்கையில் வெளியேறி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்ததனர்.
அதனை அடுத்து, 20 ஓவரில் 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்க முதலே ஆதிக்கத்தை செலுத்தியது.
Picture: Twitter @englandcricket
குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பட்லர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 71 ஓட்டங்ள் விளாசி அணி வெற்றி பெரும் வரை களத்தில் நின்றார்.
தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 22 ஓட்டங்களும், டேவிட் மாலன் 8 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, பெய்ர்ஸ்டோ 16 ஓட்டங்களுடன் அவுட் ஆகாமல், பட்லருக்கு துணையாக களத்தில் நின்றார்.
இறுதியில் 126 என்கிற எளிய இலக்கை 11.4 ஓவரிலேயே எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மாபெரும் வெற்றியை இங்கிலாந்து அணி பதிவு செய்தது.
Picture: Twitter @englandcricket
இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சாளர்கள் ஜோர்டன் 3 விக்கெட்களும், மில்ஸ் மற்றும் க்ரிஷ் ஒக்ஸ் தலா 2 விக்கெட்களும், ராஷித் மற்றும் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்து அணி வெற்றிபெற பெரிதும் உதவினர்.
4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிஷ் ஜோர்டனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், புல்லிபட்டியலில் குரூப் 1 இல் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி கண்டு முதலிடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.
மேலும், டி20 உலகக்கோப்பை 2021 தொடரில் குரூப்-1ல் இங்கிலாந்து அணியே முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என்று கூறலாம்.