டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி! திணறும் பாகிஸ்தான்... மிரட்டும் இங்கிலாந்து வீரர்கள்
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து பாகிஸ்தான் பேட்டிங் விளையாடுகிறது.
பாகிஸ்தான் பேட்டிங்
2022 டி20 உலக கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நடக்கிறது.
சற்று முன்னர் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து பாகிஸ்தான் பேட்டிங் விளையாடுகிறது.
AFP
ரிஷ்வான் அவுட்
அணியின் ஓப்பனிங் வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினார்கள். ரிஷ்வான் 15 ரன்களில் அவுட்டான நிலையில் முகமது ஹாரீசும், பாபர் அசாமும் விளையாடி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் அணி 6. 2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 41 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இப்போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகையாக $1.6 மில்லியன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
At the end of the Powerplay, Pakistan are 39-1 ?#WeHaveWeWill | #T20WorldCup | #PAKvENG pic.twitter.com/rq4UQ8Zb5r
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022