பாகிஸ்தானுடன் படுதோல்வி! இந்த 3 வீரர்களை அணியிலிருந்து தூக்கினா தான் இந்தியா ஜெயிக்கும்... பிரபலங்கள் கருத்து
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ப்ளேயிங் 11 அணியில் இருந்து 3 இந்திய அணி வீரர்களை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெறும் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சிறப்பாக சூப்பர் 12-சுற்றினை அணுகியது.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இந்திய அணி பெரிய ஏமாற்றத்தை கண்டது.
இதையடுத்து இந்திய அணியில் மூன்று வீரர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணியில் இணைக்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி, முதல் வீரராக ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் பாண்டியா தற்போது பந்து வீசாமல் பேட்ஸ்மேனாகவே மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் பேட்டிங்கிலும் அவரால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அதே போல பார்ம் அவுட்டில் சிக்கித் தவிக்கும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷான் கிஷனை கூடுதல் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கலாம் எனவும், வருண் சக்கரவர்த்தியை நீக்கிவிட்டு அனுபவம் வாய்ந்த அஷ்வினை அணியில் சேர்த்தால் நிச்சயம் இந்திய அணி பலம் பெறும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.