டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வில்லியம்சன் வடிவில் எட்டிப்பார்த்த ரிஷப் பன்ட்!
இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் அடித்த சிக்ஸ் இந்திய அணியின் வீரர் ரிஷப் பன்ட்டை ரசிகர்களுக்கு நினைவூட்டியது.
2021 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 173 ஓட்டங்கள் எடுத்தது அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றதன் மூலம், டி20 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்று வரலாற்றை மாற்றி எழுதியது.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி துடுப்பாடியது. அப்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கிழித்தெறிந்து ஆட்டத்தில் சூட்டை கிளப்பினார்.
அப்போது, வில்லியம்சன் தனது அரைசதத்தை எட்டியபோது, ஒரு கையால் சிக்ஸரை அடித்து அசத்தினார். கிளென் மேக்ஸ்வெல் வீசிய பந்துக்கு எதிராக இறங்கி ஆடிய வில்லியம்சன் அவரது ஒரு கையை ஸ்விங் செய்தார், பந்து டீப் மிட்-விக்கெட் எல்லைக்கு மேல் பறந்து சிக்ஸ் ஆனது.
ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வேகமான அரைசதம் அடித்த வில்லியம்சன், அடுத்த பந்தில் இந்த சூப்பரான சிக்ஸரை விளாசினார்.
வில்லியம்சனின் அற்புதமான ஷாட்டுக்குப் பிறகு, அனைவருக்கும் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பன்ட் நினைவுக்கு வந்தார்.
ஏனெனில், இதுபோன்ற மூர்க்கத்தனமான ஷாட்டுகு அவர் பெயர் பெற்றவர், அடிக்கடி ஒற்றை கையில் சிக்ஸர் அடிப்பவர்.
அந்த ஷாட்டை எப்படி செய்வது என்று வில்லியம்சன் பன்டிடம் இருந்து கற்றுக்கொண்டார் என்று ரசிகர்கள் சமூக வளைதளங்களில் பதிவிட்டனர்.
One-handed six from Kane Williamson. Rishabh Pant will be proud. #T20WorldCupFinal
— Vinayakk (@vinayakkm) November 14, 2021
Teacher :- @RishabhPant17 https://t.co/uXBrwGYS5Q
— Retired Captain (@rcaptain7315) November 14, 2021
Seems like Williamson took lessons from Rishabh on how to hit one-handed six against Australia. #T20WorldCup
— Sa Gomesh | ச கோமேஷ் (@theumpires_call) November 14, 2021
Coach - KW has some elbow issues
— Siddhant (@CricSidd) November 14, 2021
KW - Never mind , will play one handed #AusVsNZ #T20WorldCupFinal
ART pic.twitter.com/XK2VXZHnCt
— Sritama Panda (Ross Taylor’s Version) (@cricketpun_duh) November 14, 2021