இப்படிலாம் கூடவா அடிப்பாங்க? டெட்பாலை சிக்சராக மாற்றிய அவுஸ்திரேலிய நட்சத்திர வீரரால் குழம்பிய ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பை அரையுறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அடித்த சிக்சரை கண்டு ரசிகர்கள் குழம்பி போனார்கள்.
டி20 உலகக்கோப்பை 2வது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அணிகள் நேற்று மோதிய நிலையில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்தப்போட்டியில் ஹபீஸ் பந்தில் வார்னர் அடித்த சிக்ஸர்களால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். டீப் மிட் விக்கெட் திசை மீது வார்னர் விளாசிய பிரமாண்ட சிக்ஸர் பேசுப்பொருளானது.
YOUTUBE THUMBNAIL MATERIAL.
— Johnny#Aus??? (@JohnnySar77) November 11, 2021
?.#DavidWarner pic.twitter.com/dVC0jPcBNs
ஹபீஸ் ஒரு பார்ட் டைம் பவுலர். ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்ஸை விட மோசமான ஒரு பந்தை வீசினார். முதல் பந்து ஹபீஸ் வீசும்போது கையை விட்டு வழுக்கி சென்றது. அந்த பந்து லெக் சைடில் இரண்டு பிட்சாகி வந்தது. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அதனை நாம் டெட் பால் என்று கூறுவோம்.
இது டெட் பால் பா என்று ரசிகர்கள் கவனித்துக்கொண்டிருக்க வார்னர் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட் திசையில் பிரம்மாண்ட சிக்ஸர் பறக்கவிட்டார். வார்னர் விளையாட்டுக்கு இந்த பந்தை அடித்திருக்கிறார் என ரசிகர்கள் நினைக்க அம்பயர் சிக்ஸ் என்றார். ரசிகர்கள் ஒரு கனம் குழப்பத்தில் இருந்தனர்.
கிரிக்கெட் விதிகளின் படி அது நோ-பால். கள நடுவரும் ஹபீஸ் வீசிய பந்தை நோபால் என்று அறிவித்தார். வார்னர் அந்தப் பந்தை சரியாக பயன்படுத்தி சிக்ஸ்ர் அடித்ததால் ஆஸ்திரேலியா அணிக்கு அது போனஸாக அமைந்தது.