கனடாவில் இந்திரா காந்தி படுகொலை சித்தரிப்பு காட்சி ஊர்வலம்: வைரலாகும் வீடியோ
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி கனேடிய தெருக்களில் ஊர்வலமாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் காலிஸ்தானி ஆதரவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கனடாவில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு பேரணிகள் அடிக்கடி நடந்துள்ளன.
இப்போது, ஜூன் 4 அன்று காலிஸ்தானி ஆதரவாளர்களால் கனடாவின் பிராம்டனில் ஒரு அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பின் ஒரு பகுதியாக சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் வகையில் ஒரு அலங்காரா ஊத்தி (Tableau) ஊர்வலமாக சென்றது.
காலிஸ்தானி ஆதரவாளர்கள் பிராம்ப்டன் நகரில் சுமார் 5 கி.மீ தூரம் அணிவகுப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. காலிஸ்தானிகளின் இந்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🇨🇦 Canada: Khalistani terrorists in Brampton not only recreated the assassination of Bharat's former PM Indira Gandhi but also paraded with it.
— Treeni (@_treeni) June 7, 2023
Such open support for terrorism and assassination in a so called 'first world country' has left Netizens jaw-dropped. pic.twitter.com/LoN39K14o5
ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காலிஸ்தானியர்கள் இந்த அணிவகுப்பை நடத்தினர்.
இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் திகதி, சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இருந்து சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்ற இந்திய ராணுவம் நடத்தியது. இந்திய இராணுவத்தால் காலிஸ்தானி ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே மற்றும் அவரது மற்ற கூட்டாளிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் புளூஸ்டாருக்கு சில மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 31-ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார்.