10 வயது சிறுவன் வென்ற சிலிகான் வாலி விருது - அவர் கண்டுபிடித்த AI Electronic Nose
10-year-old Taiwanese inventor wins top Silicon Valley award: தைவானைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமான சிலிகான் வாலியில் நடைபெற்ற போட்டியில் மிக உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார்.
காங் சியாவோ சர்வதேச பள்ளியின் மாணவரான சு டிங்-வெய் (Hsu Ting-wei) என்ற இந்த சிறுவன், Novel Artificial Electronic Nose என்கிற AI அடிப்படையிலான மோப்பம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

Electronic Nose
இது விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அபாயகரமான பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை மணம் மூலம் கண்டறியும் திறன் கொண்டது.
இந்த “மின்மூக்கு” (Electronic Nose) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மனித மூக்கின் மணம் அறியும் திறனைப் போல, AI மூலம் தரவுகளை பகுப்பாய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான பொருட்களை உடனடியாக அடையாளம் காணும்.
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Top Young Innovator விருது

சிறுவனின் கண்டுபிடிப்பு, Silicon Valley International Tech Awards 2026-இல் “Top Young Innovator” விருதைப் பெற்றது. உலகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில், அவரது யோசனை தனித்துவம் மற்றும் சமூகப் பயன்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டது.
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் பெரும்பாலும் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த AI மின்மூக்கு, சில வினாடிகளில் அபாயகரமான பொருட்களை கண்டறிய முடியும். இதனால், பயணிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சோதனைகளை கடக்க முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |