சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில்….400 அமெரிக்க ஏவுகணைகள் வாங்கும் திட்டம்: தைவான் துணிச்சல்
சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் தைவான் அமெரிக்காவிடம் இருந்து 400 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
தைவான்-சீனா பதற்றம்
தைவானை தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக சீனா தெரிவித்து வரும் நிலையில், தைவான் தன்னை சுதந்திர தீவு நாடாக பிரகடனப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை இந்த மாதம் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் கலிபோர்னியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், சீனாவில் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவானுக்கு ஆயுத விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சாய் இங்-வென் வலியுறுத்தினார்.
தைவானின் இந்த செயலை கண்டு ஆத்திரமடைந்த சீனா, தைவானை எச்சரிக்கும் விதமாக அதன் கடற்பரப்பில் மிகப்பெரிய 3 நாள் போர் ஒத்திகையை நடத்தியது.
400 ஏவுகணை
இந்நிலையில் சீனாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து 400 ஹார்பூன் ஏவுகணைகளை தைவான் வாங்கும் என வர்த்தகக் குழுவின் தலைவர் மற்றும் பிரச்சினையை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி திங்களன்று ப்ளூம்பெர்க் நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டில், தைவான் தனது இராணுவ நவீனமயமாக்கல் முயற்சிகளின் ஒற்றை பகுதியாக நிலத்தை அடிப்படையாகக் கொண்ட போயிங்-தயாரிக்கப்பட்ட ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது..