தமிழ்நாட்டிற்கு வந்து இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் காதல் ஜோடி
தைவான் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து இந்து முறைப்படி திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்து முறைப்படி திருமணம்
தமிழக மாவட்டமான மயிலாடுதுறை, சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற சித்தர்பீடம் உள்ளது.
இங்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். குறிப்பாக, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவர்.
இந்நிலையில், தைவான் நாட்டைச் சேர்ந்த இமிங், சு ஹூவா ஆகிய இருவரும் சித்தர் பீடத்திற்கு வந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதனால், மயிலாடுதுறையில் உள்ள சித்தர் பீடத்திற்கு திருமணம் செய்து கொள்ள வந்தனர்.
அங்கு, சிவாச்சாரியார்கள் அருண், கணேஷ் முன்னிலையில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து இந்து முறைபப்டி திருமணம் செய்து கொண்டனர்.
இதில், திருமணத்தில் கலந்து கொள்வதற்கான தம்பதியினரின் உறவினரும் தைவான் நாட்டில் இருந்து வந்து வேட்டி, சேலை அணிந்து மணமக்களை வாழ்த்தினர். இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |