பிரித்தானியாவில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை வெளியானது
பிரித்தானியாவில் இதுவரை 8 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கான பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களுக்காக பூஸ்டர் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 1ம் திகதி வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் இதுவரை 8 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, தகுதியுடைய மக்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மையங்களில் சென்று தங்களுக்கான பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில், 45,712,351 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 8,115,229 பேர் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், 48,790,855 பேர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவது உறுதி என்றாலும், தடுப்பூசியின் வீரியம் குறையும் வாய்ப்புகள் இருப்பதாலையே தற்போது பூஸ்டர் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகிறது.