தெற்கு வேல்ஸில் நடந்த துப்பாக்கி சூடு: பெண் உயிரிழப்பு: 42 வயது நபர் கைது!
தெற்கு வேல்ஸில் உள்ள டால்போட் கிரீன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு
தெற்கு வேல்ஸில் உள்ள டால்போட் கிரீன்(Talbot Green) நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 40 வயது பெண் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கார்டிஃபிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள கிரீன் பார்க் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள், உயிருக்கு போராடிய பெண்ணை மீட்க கடுமையாக முயற்சி செய்தனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணை
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய 42 வயது நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பறியும் அதிகாரிகள், இந்த சம்பவத்தின் முழு விவரங்களையும் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்று புலனாய்வு தலைமை அதிகாரி ஜேம்ஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |