பிரித்தானிய படைகள் ஆப்கனிலிருந்து ஒரு வாரத்துக்குள் வெளியேறவில்லையென்றால் போர்: தாலிபான்கள் எச்சரிக்கை
பிரித்தானிய படைகள் ஒரு வாரத்துக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
தாலிபான் செய்தித்தொடர்பாளரான Suhail Shaheen நேற்று பேசும்போது, அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள், எந்த நாடு அவர்களுக்கு விசா அளிக்க முன்வருகிறதோ அந்த நாட்டுக்குச் செல்ல தடையேதும் இல்லை என்றார்.
ஆனால், The Sun பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், அதே Suhail Shaheen, அனைத்து நாடுகளின் படைகளும் தாங்கள் சொன்ன நேரத்துக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியாகவேண்டும். அல்லது போர் ஏற்படும் சூழல் உருவாகலாம் என எச்சரித்தார்.
மாற்றி மாற்றி பேசுவதே தாலிபான்களின் வழக்கமாகிவிட்டது என்பதை அவரது பேச்சு உறுதி செய்துள்ளது.
பிரித்தானியா தங்களால் இயன்ற அளவுக்கு விமானங்களை காபூலுக்கு அனுப்பி ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அத்துடன் அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானியர்களை மீட்குமாறு வலியுறுத்தி வருகிறது.
என்றாலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அடுத்த ஏழு நாட்களில் அமெரிக்க படைகளையே காபூலிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளார்.