தாலிபான்கள் சடலங்களுடன் உறவு கொள்வார்கள்! ஆப்கானில் இருந்து தப்பி இந்தியா வந்த பெண் கூறிய அதிர்ச்சி தகவல்
தாலிபான்கள் உயிரிழந்த பெண்களின் சடலங்களுடன் உறவு கொள்வார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஆப்கானில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த பெண் வெளியிட்டுள்ளார்.
முஸ்கன் என்ற பெண் ஆப்கானிஸ்தானில் உள்ள பொலிஸ் படையில் வேலை பார்த்த நிலையில் தாலிபான்களுக்கு பயந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
தற்போது முஸ்கன் புது டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தாலிபான்கள் குறித்து சில அதிர்ச்சி தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் உறவு கொள்ளும் பழக்கம் தாலிபான்களுக்கு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பதெல்லாம் முக்கியமில்லை என கூறி அதிர வைத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தாலிபான்கள் பெண்களை தூக்கி செல்வார்கள் அல்லது அவர்களை நோக்கி சுடுவார்கள்.
என் வாழ்க்கையும் அவர்களால் பாதிக்கப்படும் என்பதால் தான் வேலையை விட்டு நாட்டை விட்டு வெளியேறினேன் என கூறியுள்ளார்.