ஆப்கானில் பெண்களுக்காக தலிபான்கள் பிறப்பித்துள்ள உத்தரவு
ஆப்கானில் பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது, கணவரை இழந்த பெண்களுக்கு கணவனின் சொத்துக்களில் பங்கு உண்டு போன்ற புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய பின்னர், இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளனர்.
அந்நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் முதல் கட்டமாக பெண்களுக்கு உரிமைகள் தலிபான்கள் ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், பெண்களை ஒரு சொத்தாகக் கருதக்கூடாது. பெண்ளைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது.
அவர்களின் சம்மதம் பெற்ற பின்புதான் திருமணம் நடத்தப்பட வேண்டும். பெண்களைச் சொத்தாகக் கருதி அவரைக் கைமாற்றுவதோ, அல்லது விற்பனை செய்வதோ கூடாது. கணவரை இழந்த பெண்களுக்குக் கணவரின் சொத்தில் பங்கு வழங்கிட வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.