மன்னிப்பு கேள், இல்லையேல் வெளியே போ! நேர்காணலின்போது டிக்டோக் இளைஞரை கோபத்தில் கத்திய தொகுப்பாளர்
பிரித்தானியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது டிக்டோக் இளைஞரை நோக்கி தொகுப்பாளர் கோபத்தில் கத்தியதுடன், அவரை வெளியேறுமாறு கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டிக்டோக் பிரபலம்
கிழக்கு லண்டனில் Bacari-Bronze O'Garro என்ற இயற்பெயர் கொண்ட Mizzy எனும் இளைஞர் டிக்டோக் செய்து பிரபலமானவர்.
ஆனால் பொதுமக்களை பாதிக்கும், தவறான பாதைக்கு வழிநடத்தும் விதமாக அவரது வீடியோக்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Here's the full interview with #Mizzy https://t.co/zDqcpYEhd9 pic.twitter.com/MglI8btUUi
— André Walker (@andrejpwalker) June 4, 2023
இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் Mizzyயும், அரசியல் விமர்சகர் ரீம் இப்ராஹிமும் கலந்துகொண்டனர்.
அப்போது ரீம் இப்ராஹிம், மக்கள் காயமடைய வழிவகுக்கும் விதமான நடத்தைகளை ஊக்குவிக்கிறீர்களா? என Mizzyயிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் Mizzyயோ அதற்கு பதில் அளிக்காமல் ரீமை பார்த்துக் கொண்டிருந்தார்.
கோபமடைந்த தொகுப்பாளர்
அச்சமயம் குறுக்கிட்ட தொகுப்பாளர் வாக்கர், Mizzyயை நோக்கி தனது விரலை அசைத்து, 'நீங்கள் அவரை அச்சுறுத்துகிறீர்கள், அதை என்னிடம் செய்யலாம். மன்னிப்பு கேள், இல்லையேல் வெளியே செல்' என கோபமாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து Mizzy 'நான் உங்களை மதிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும், ஆனால் நான் இங்கே முடித்துவிட்டேன்' என ரீமிடம் கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.
வைரலாகும் வீடியோ
அதன் பின்னர் ''எந்த சூழ்நிலையிலும் எனது நிகழ்ச்சியில் விருந்தினர்களை மிரட்டுவது நடக்காது'' என கூறிய வாக்கர், ரீமிடம் வருத்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் ஆண்ட்ரே வாக்கர் முழு நேர்காணலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.