உக்ரைன் விவகாரம்: பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு புடின் பச்சை கொடி
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் நடத்திய பேச்சு வார்த்தை பயனுள்ளவை, முக்கியமானவை மற்றும் வணிகம் சார்ந்தவை என்று ரஷ்ய அதிபர் புடின் விவரித்துள்ளார்.
உக்ரைன் பிரச்னையில் சுமூக தீர்வு காண, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட மக்ரோன், திங்கட்கிழமை அந்நாட்டின் தலைநகர் கிரெம்ளின் வைத்து ரஷ்யா அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டு செய்தி மாநாட்டில் பேசிய புடின், மக்ரோனின் சில யோசனைகள் மேலதிக கூட்டு நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமையும் என்று கூறினார்.
பாதுகாப்பு தொடர்பான மக்ரோனின் பல யோசனைகள் யதார்த்தமானவை.
மக்ரோனின் உக்ரைன் பயணத்திற்குப் பிறகு, நாங்கள் மீண்டும் ஒருவரையொருவர் அழைத்து இந்த விஷயத்தில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம் என்று புடின் கூறினார்.