10 நிமிட IPL நிகழ்ச்சிக்கு 50 லட்சம் ஊதியம்! நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல நடிகை தமன்னாவின் ஊதியம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை ஊதியம்
தமிழ்ப்பட நடிகை தமன்னா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2005ஆம் ஆண்டில் வெளியான Chand Sa Roshan Chehra இந்தி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, 2006யில் கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெற்றிப்படங்களில் நடித்தார். ஒரு படத்திற்கு ரூ.2 முதல் ரூ.5 கோடி வரை தமன்னா நடிப்பதற்கு ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ஒரு பாடலுக்கு என தனியாக நடனமாட இவரது ஊதியம் வேறுபடுகிறது. குறிப்பாக ஸ்த்ரீ2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.1 கோடி ரூபாய் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடக்க விழாவிற்கான 10 நிமிட நிகழ்ச்சிக்காக, தமன்னா ரூ.50 லட்சம் ஊதியம் வாங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவித்தன.
சொத்து மதிப்பு
தென்னிந்திய நடிகைகளில் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் ஒருவராக உள்ள தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.120 கோடி இருக்கும் என்று ஊடக அறிக்கை கூறுகிறது.
அத்துடன் 2024யில் அவரது நிகர மதிப்பு ரூ.10 கோடி அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தமன்னாவுக்கு 14வது மாடியில் அழகான குடியிருப்பு உள்ளது.
சில சொகுசு கார்களின் உரிமையாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தமன்னாவின் கார் சேகரிப்பில் BMW 320i இடம்பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.43.50 லட்சம் ஆகும்.
மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான Mercedes-Benz GLE, ரூ.29.96 லட்சம் விலையிலான Mitsubishi Pajero Sport மற்றும் ரூ.75 மதிப்பிலான Land Rover Range rover discovery sport கார்களையும் வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |