கோஹ்லியுடன் நெருக்கம்.,பாகிஸ்தான் வீரருடன் திருமணம்? உண்மையை உடைத்த தமன்னா
நடிகை தமன்னா தனது திருமணம், டேட்டிங் குறித்து உலாவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விளம்பரத்தில் ஒன்றாக
2010ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை தமன்னாவும் இணைந்து விளம்பரத்தில் நடித்திருந்தனர்.
அப்போது அனுஷ்காவுடன் கோஹ்லி திருமணம் ஆகாத காலகட்டம். இருவரும் சிங்கிள் என்பதால் கோஹ்லியும், தமன்னாவும் டேட்டிங் செய்வதாக செய்தி பரவியது.
அதேபோல் நகைக்கடை திறப்பு விழா ஒன்றுக்கு தமன்னா வந்திருந்தபோது, அவருடன் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் பங்கேற்றிருந்தார்.
இந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு தமன்னா பதிலளித்துள்ளார்.
தமன்னா விளக்கம்
அவர், "நான் அவரை (கோஹ்லி) ஒருநாள் மட்டுமே சந்தித்தால் மிகவும் மோசமாக உணர்கிறேன். படப்பிடிப்புக்குப் பிறகு நான் விராட்டை ஒருபோதும் சந்தித்ததில்லை.
ஊடகங்கள் எந்த தொடர்பும் இல்லாத ஒருவருடன் இணைக்கும்போது அது மிகவும் சங்கடமாக இருக்கிறது. இதனை சமாளிக்க நேரம் எடுக்கும், ஆனால் அதைப் பற்றி யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதை இறுதியாக ஒப்புக்கொள்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பெயரை ஒன்லைனில் தொடர்ந்து தேடுவதன் மூலம் பொதுமக்களின் கருத்தை தமன்னா கவனித்து வருவதை, "நான் அவ்வப்போது என்னை கூகுள் செய்து கொண்டே இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தி நடிகர் விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. பின்னர் அவர்கள் உறவில் முறிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |