புளி ஜூஸ் கொஞ்சம் குடிப்பதில் என்னென்ன நன்மைகள்?
புளி சாறை கொஞ்சமாக குடித்தால் அதில் சில பயன்கள் இருக்கிறது.
புளியில் நார்ச்சத்தும், புரதச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்திருக்கிறது. அதோடு புளியில் பைட்டோ கெமிக்கல்களும் அதிகளவில் உள்ளது.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், மெக்னீஷியம் உள்ளது. இது உடல் எடை குறையவும், ரத்த குளுக்கோஸை குறைக்கவும் உதவுகிறது.
உண்டாகும் நன்மைகள்
புளி ஜூஸில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது. அடிபட்டால், அது குணமாக உதவுகிறது.
இதில் பி வைட்டமின் ஆன தைமின், ரிபோபிளாவின், நைசின் உள்ளது. மேலும் இதில் பொட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு சத்து உள்ளது.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆனா, பாலிபினால்ஸ், பிளபாய்ட்ஸ் உள்ளது. இது செல்களை சேதத்திலிருந்து காப்பாற்றுகிறது.
ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும். இதில் இருக்கும் கரையக் கூடிய நார்சத்து மலச்சிக்கலை குறைக்க உதவும்.
இந்நிலையில் இது கெட்ட கொலஸ்டரால் அளவை குறைக்கும், இதனால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மேலும் அதிக நார்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், இதய ஆரோக்கியமாக இருக்கும்.
இதில் வீக்கத்திற்கு எதிரான காம்பவுண்டான பாலிபினால்ஸ், பையோ பிளாபாய்ட்ஸ் உள்ளது. இது உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும்.
குறிப்பாக ஆர்தரடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமாக உதவும். இதில் உள்ள மெக்னீஷியம் எலும்புகளை உருவாக்குவதில், இதய துடிப்பும் சீராக்க உதவு செய்கிறது.
இது ரத்த குளுக்கோஸ் அளவை குறைத்து சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |