மோசடி புகாரில் கைதா? பிக்பாஸ் பிரபலம் தினேஷ் விளக்கம்
பண மோசடி வழக்கில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தினேஷ்.
இவர், தமிழ் பிக்பாஸ் 7 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் சக நடிகை ரச்சிதாவை திருமணம் செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
நடிகர் தினேஷ் கைது
இந்நிலையில், பண மோசடி வழக்கில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தினேஷ் மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், "சீரியல் நடிகர் தினேஷ் என்னுடைய மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 2022 ஆம் ஆண்டில் 3 லட்சம் வாங்கினார். அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை.
அதனால் பணத்தை திருப்பி கேட்ட போது தராமல் ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டு போன என்னை கம்பால் தாக்கினார்" என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நெல்லை மாவட்டம் பணகுடி காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தான் கைது செய்யப்படவில்லை இது பொய்யான புகார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |