வேலைக்கு கூட போக வேணாம்! கணவராக என் கூட இருக்கனும்... மறைந்த நடிகர் ஹரி மனைவியின் நம்பிக்கை வீண்
மறைந்த நடிகர் ஹரி வைரவன் எப்படியும் நல்ல நிலைக்கு மீண்டும் வருவார் என அவர் மனைவி தொடர்ந்து கூறி வந்த நிலையில் அவரின் நம்பிக்கை வீணாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஹரி வைரவன். மேலும் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த ஹரி நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
ஹரி வைரவன்
வறுமையில் வாடிய ஹரி வைரவனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதய நோய் ஏற்பட்டதுடன் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்தன.
வீணாய் போன மனைவியின் நம்பிக்கை
இதன் காரணமாக அவருக்கு கால்கள் வீங்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்து உள்ளார். முன்னர் தன் கஷ்டத்தை கூறி அவர் பேட்டியளித்த நிலையில் நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டோரும் உதவி செய்தார்கள்.
இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவர் மனைவி முன்னர் கூறுகையில், இந்த சிகிச்சையின் மூலம் ஹரி வைரவனை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், உடல் வீக்கத்தை குறைக்க இருப்பதாக மருத்துவர் தன்னிடம் தெரிவித்ததாக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மீண்டும் ஹரி வைரவனை நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவரை சினிமாவில் நடிக்க வைப்பேன் எனவும் அவரது மனைவி தெரிவித்தார். அவர் வேலைக்கு கூட செல்ல வேண்டாம், கணவராக அவர் என் கூட இருக்கவேண்டும் என்று என தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் நினைத்தது நடக்காமல் போய் தனது கணவரை பறிகொடுத்துள்ளார்.