பிரபல தமிழ் சின்னத்திரை நடிகர் ஏற்படுத்திய பரபரப்பு! கொலை செய்ய போவதாக மிரட்டல் வருவதாக புகார்
பிரபல நடிகர் மீசை ராஜேந்திரநாத் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
தமிழில் திருப்பாச்சி, சுறா, சாமி, அயன் போன்ற பல படங்களில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளவர் மீசை ராஜேந்திராநாத்.
மேலும் இவர் தெய்வமகள், திருமகள் போன்ற பல தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார், அதில், சென்னை சூளைமேடு பகுதியில் தான் வசித்து வருகிறேன் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் முத்துமாலை அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் முக்கூடல் பகுதியயை சேர்ந்த ராஜா, கிரிதரன்,பசுபதி, முத்துசாமி, மணி ஆகிய நபர்கள் கோவில் பெயரை பயன்படுத்தி பல கோடி மோசடி செய்வது மட்டுமின்றி உண்டியல்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்து, மோசடி செய்வது, ஐம்பொன் சிலை திருட்டு, மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பது. போன்ற தவறான செயல்களை பல வருடங்களாக செய்து வருகிறார்கள்.
இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை போட்டு தடை ஆணையை பெற்றுள்ளேன்.
இதனால் இது போன்ற செயலில் ஈடுபடுவதால் சமூக ஊடகங்களில் தன்னைப்பற்றி அவதூறான கருத்துக்களை பரப்புவது மட்டுமல்லாமல், திருநெல்வேலியில் உள்ள தாய் மற்றும் தம்பியை கொலை செய்ய போவதாகவும் தொடர்ச்சியாக தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
ஆகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.