குளிப்பதை வீடியோ எடுக்கிறார்! பிரபல தமிழ்ப்பட வில்லன், குணச்சித்திர நடிகர் மீது பரபர புகார்.. கார் கண்ணாடி உடைப்பு
பிரபல நடிகர் மீசை ராஜேந்திரநாத் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி அவரின் கார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் ராஜேந்திரநாத். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான நெல்லைக்கு நிகழ்ச்சிக்காக ராஜேந்திரநாத் வருகை தந்திருந்த நிலையில், முக்கூடல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார.
அப்போது முக்கூடலில் ஆற்றில் குளிப்பதை நடிகர் ராஜேந்திரநாத் வீடியோ எடுப்பதாக, அப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இதே பிரச்சனை வளர்ந்து கொண்டே வருவதாகவும், எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கோரி முக்கூடல் அரிராம் சேட் வளாகத்தில் திரண்டனர்.
இந்த சூழலில் ராஜேந்திரநாத் கார் மீது அவர்களில் பலர் கற்களை வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த, முக்கூடல் காவல் ஆய்வாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து தன்னை தாக்க முயற்சித்ததாகவும் காரின் பின்புற கண்ணாடியை கல்வீசி உடைத்து தங்களை தாக்க முயற்சித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் மீசை ராஜேந்திரநாத் புகார் அளித்துள்ளார்.
தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை ஊருக்கு வரும்போது பிரச்னை வரும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் காவல் பாதுகாப்பிற்கு ஆணை வாங்கி உள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
தன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.