கொடிய நோயால் ரஜினி பட நடிகை மரணம்: கவனிப்பாரற்ற கொடூரமான இறுதிக்காலம்
ரஜினி மற்றும் கமல் படங்களில் நடித்த முன்னணி நடிகை நிஷா நூர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு எலும்பும், தோலுமாய் இருந்த நிலையில் உயிரிழந்தார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நிஷா நூர், இவர் தமிழில் மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகியுள்ளார்.
@youtube
அதற்குப்பின் இவர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த டிக் டிக் டிக் படத்தில் நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து இதோ இதோ, அவள் சுமங்கலிதான் போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டார்.
@youtube
மேலும் இவர் இயக்குநர் பாலசந்தரின் இயக்கத்தில் கல்யாண அகதிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினி காந்தின் நூறாவது படமான
ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடித்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
எய்ட்ஸ் நோயால் உயிரிழப்பு
இதனிடையே கடந்த 2007ஆம் ஆண்டு தர்காவிற்கு வெளியே உடல் மெலிந்து மிக மோசமான நிலையில் இருந்திருக்கிறார். அதன்பின் அவர் நடிகை நிஷா தூர் என தெரிந்துள்ளது.
@youtube
மேலும் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பின்னர் தான் தெரிய வந்தது. வறுமையின் பிடியில் சிக்கிய அவர், கவனிப்பாரற்று கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நிஷா நூர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கும் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.