வத்திக்கான் தேவாலயத்தில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!
வத்திக்கானில் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் மாநிலப் பாடல், தாய்த் தமிழுக்கான அழைப்புப் பாடப்பட்டது.
1700-களில் பிறந்த, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு, ரோம் நகரத்தில் உள்ள வத்திகான் தேவாலயத்தில் புனிதர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னதாக, செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்: 36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில்., மகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த வீரத்தாய்!
அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் மாநில கீதமான தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. இந்தப் பாடலை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு கன்னியாஸ்திரிகள் பாடினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விடியோவை தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதனை டெக் செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே!" என்று எழுதியதுடன், தமிழ்த்தாயின் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே! https://t.co/4nAVp6m7Cb pic.twitter.com/eu9g1WTVgI
— M.K.Stalin (@mkstalin) May 15, 2022
இதையும் படியுங்கள்: படுத்தப் படுக்கையாக புடின்! புற்றுநோயா? முன்னாள் பிரித்தானிய உளவாளி தகவல்