4 வயதில் அரபு, ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்ட தமிழ் சிறுவன்: பெற்றோர் கூறும் பிரமிக்க வைக்கும் பின்னணி
பிரித்தானியாவின் ரீடிங் பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 4 வயது தமிழ் சிறுவன் தொலைக்காட்சி பார்த்தே அரபு மற்றும் ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்ட பிரமிக்க வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் கதாநாயகன்
தங்களுக்கு புரியாத மொழிகளை மிக எளிதாக க்ற்றுக்கொண்டு, தங்களிடம் பேச முயற்சிப்பதால், தற்போது தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பதாக சிறுவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
@dailymail
தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் இருந்து பிரித்தானியாவின் ரீடிங் பகுதிக்கு 2019ல் குடியேறியவர்கள் அருண் ராமராஜன்(34) மற்றும் பவித்ரா அருண்(3) தம்பதி. இவர்களின் நான்கு வயது மகன் சாஷ்வத் அருண் என்பவரே இந்த சம்பவத்தின் கதாநாயகன்.
மூன்று வயதாக இருக்கும் போதே சிறுவன் சாஷ்வத் Mensa சர்வதேச அமைப்பில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் செயல்படும் மென்சா அமைப்பானது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான உயர் IQ சமூகமாகும்.
Mensa சர்வதேச அமைப்பில்
இந்த அமைப்பில் மிக இளம் வயது உறுப்பினர்களில் சிறுவன் சாஷ்வதும் ஒருவர். இவரது பிரமிக்க வைக்கும் IQ 99.9% என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், தமது மகன் தொடர்பில் பெருமைபட கூறும் அருண் ராமராஜன், வாசிப்பு மற்றும் காணொளிகளை கவனித்தே சாஷ்வத் அதிகமாக கற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
@dailymail
யூடியூப் பார்த்தே ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்டுள்ளார் சாஷ்வத். மேலும், அரபு மற்றும் சீன மொழியும் கற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்தே, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டதாக அருண் தெரிவித்துள்ளார்.
தாம் ஆங்கிலத்தில் உரையாட அதற்கு ஸ்பானிஷ் மொழியில் சாஷ்வத் பதிலளித்து வந்துள்ளதாக அருண் தெரிவித்துள்ளார். மூன்றரை வயது இருக்கும் போது மென்சா அமைப்பில் IQ தேர்வில் பங்கேற்று அதில் வெற்றிபெற, தற்போது நான்காவது மிக இள வயது உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
@dailymail
தங்களது மகனின் திறமை குறித்து பெருமைப்படுவதாக கூறும் அருண் தம்பதி, கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் இசையிலும் தங்கள் மகனை ஈடுபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.