மொத்த சொத்தையும் (ரூ.6,000 கோடி) ஊழியர்களுக்கு தானமாக கொடுத்த தமிழ் தொழிலதிபர்
ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் ஆர்.தியாகராஜன், தனது நிறுவனத்தின் சொத்து மதிப்பான ரூ.6,210 கோடி -யை ஊழியர்களுக்கு தானமாக கொடுத்துள்ளார்.
ஆர்.தியாகராஜன்
இந்தியாவில் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்று ரீராம் நிதி நிறுவனம். இதன் நிறுவனர் ஆர்.தியாகராஜன் ஆவார். இந்நிறுவனமானது ஏழை, எளிய மக்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடங்கி சில ஆண்டுகளிலேயே பெரிய வளர்ச்சியை கண்டது.
ஏற்கனவே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தேவையை நான் என்றுமே பெரிதாக நினைத்ததில்லை. ஏழை மக்களின் நிதித்தேவையை நிறைவேற்றுவது தான் முக்கியம் எனக் கூறியவர் ஆர்.தியாகராஜன்.
ஏழைகளுக்கு கடன் வழங்குவதற்கு பல எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்த போதிலும் சாதாரண மக்களுக்கு ட்ரக்குகள், டிராக்டர்கள் வாங்க கடன் வழங்கியும், அவர்கள் சேமிப்பதற்காக சீட்டு திட்டங்களையும் தொடங்கினார்.
தமிழகத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் தான் ஆர்.தியாகராஜன். இவர், 37 வயதில் ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் அதனை 20 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களுள் ஒன்றாக மாற்றினார்.
ஸ்ரீராம் குழுமம்
சாதாரண மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை கொடுத்தால், அத்தகைய கடன் பாதுகாப்பனதாகவும், லாபமாகவும் இருக்கும் என நினைத்த ஆர்.தியாகராஜனுடைய ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனமானது ஒரே ஆண்டில் 35 % உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல், பங்கு விலையும் வளர்ச்சியடைந்தது.
தற்போது, ஸ்ரீராம் குழும பங்குகளின் நிகர சொத்து மதிப்பு ரூ.6,210 கோடியாகும். 30 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 23 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஆர்.தியாகராஜன் இடதுசாரி கொள்கையை கடைபிடித்தாலும், சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தார்.
86 வயதான இவர் தற்போது சென்னையில் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். சொந்தமாக இவரிடம் செல்போன் கூட இல்லை. இவருடைய காரின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
முக்கியமாக, இவர் தனது குழுமத்தின் சொத்துக்களை தன்னிடம் பணிபுரியும் குறிப்பிட்ட ஊழியர்களின் பெயருக்கு மாற்றி எழுதி வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |