மாடல் அழகியுடன் திருமணம்: பிரமாண்டமாக நடைபெற்ற தமிழ் நடிகர் காளிதாஸ் நிச்சயதார்த்தம்
பிரபல தென்னிந்திய நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகி தாரிணியை திருமணம் செய்ய உள்ளார்.
காளிதாஸ் நிச்சயதார்த்தம்
பிரபல தென்னிந்திய நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் மற்றும் இளம் தென்னிந்திய நடிகரான காளிதாஸ் ஜெயராமுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகி தாரிணிக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நடிகர் காளிதாஸ் ஜெயராமும், மாடல் அழகி தாரணியும் காதலித்து வந்த நிலையில் இந்த திருமணம் முடிவாகியுள்ளது.
தாரணியை கடந்த ஆண்டு நடந்த ஓணம் பண்டிகையின் போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து கடந்த காதலர் தினத்தன்று தாரணியை தனது காதலி என வெளியுலகிற்கு வெளிப்படையாக அறிவித்தார்.
மேலும் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் தாரணியை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் அறிவித்தார்.
#KalidasJayaram locked ? pic.twitter.com/GB9n0dwhUR
— Filmy Monks (@filmy_monks) November 10, 2023
தேசிய விருது
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய 7 வயதில் அதாவது 2000ம் ஆண்டில் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
பின்னர் என்டே வீடு அப்புவின்டேயும் என்ற படத்தின் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
மேலும் விக்ரம் 2, மீன் குழம்பும் மண்பானையும், நட்சத்திரம் நகர்கிறது ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதைப்போல தாரணி 2021ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவில் மூன்றாவது ரன்னர் அப் ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |