தமிழ் இயக்குநர் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி
தமிழ்திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் நாகேந்திரன்
2015ஆம் ஆண்டில் விமல் நடிப்பில் வெளியான காவல் என்ற படத்தை இயக்கியவர் ஆர்.நாகேந்திரன்.
இவர் தம்பி, பிரியாணி, சென்னை 600028 பார்ட் 2 படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நாகேந்திரன் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாகிராமில் நாகேந்திரனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவங்கி வைத்திருக்கிறது" என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |