திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமானார்.
வேலு பிரபாகரன்
1980 ஆம் ஆண்டு வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலம், ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேலு பிரபாகரன்.
தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து, நெப்போலியன், சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்த படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், வேலு பிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி, பீட்ஸா 3 என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த மே மாதம் வெளியான கஜானா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
முன்னதாக, தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என கருதப்படும் ஜெயதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதை தொடர்ந்து, தனது 60 வயதில், வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் தன்னுடன் நடித்த ஷிர்லே தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |