வெளிநாட்டவர்களையும் தன் திறமையால் கட்டி போட்ட தமிழர்! கூரையை பீய்த்து கொட்டும் பணம்
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் பெயர் நாகராஜ்! இந்த நிறுவனம் ரூ. 1000 கோடிக்கு மேல் வியாபாரம் பார்க்கிறது. சர்வதேச அளவுக்கு பிரபலமான நிறுவனமாக ராம்ராஜ் காட்டன் திகழ்கிறது.
சிறிய கிராமத்தில் பிறந்த நாகராஜ்
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைக்காட்டி புதூர் என்ற சிறிய கிராமம் தான் நாகராஜின் பூர்வீகம். இவர் படித்தது பத்தாம் வகுப்பு தான். ஒரு சமயத்தில் ஊருக்குள்ள ஒருவர் அம்பாசிடர் காரில், வேட்டி, சட்டையில் கம்பீரமாக போனார்.
அவர் யார் என நாகராஜ் விசாரித்த போது ஜவுளி வியாபாரம் செய்பவர் என தெரிந்து கொண்டார். அப்போது தான் ஜவுளி வியாபாரம் பண்ணா, நாமளும் கார்ல போகலாம்னு விளையாட்டுத்தனமா ஒரு யோசனை அவர் மனதில் பதிந்தது. அது தான் முதல் விதை!! இது தான் பின்னாளில் அவரிடம் கப்பல் போன்ற பல சொகுசு கார்கள் வரவும், கோடிகளில் பணம் கொட்டவும் காரணமாக அமைந்தது.
ராம்ராஜ் பெயர் காரணம்
பின்னர் மார்க்கெட்டிங் வேலை செய்தார். அதாவது வெள்ளை வேட்டி கட்டிட்டு, காரில் ஊருக்குள்ள போகணும் என்பதே என்பதே அவரின் கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது. ஒருகட்டத்தில் சொந்த தொழில் தொடங்க நம்பிக்கை வந்தது. சிறிய பணத்தில் திருப்பூரில் துணி ஏற்றுமதியை நாகராஜ் தொடங்கினார். தனது பெயர் நாகராஜ் மற்றும் தந்தையின் பெயர் ராமசாமி என இரண்டையும் சேர்த்து ’ராம்ராஜ்’ என பெயர் வைத்து வேட்டிகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
அவரின் கடும் உழைப்பால் ராம்ராஜ் வேட்டிகள் இந்தியாவின் நம்பர்-1 பிராண்டாக மாறியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு இவர் தயாரித்தது 20,000 வேட்டிகள். இன்று தினசரி 1.5 லட்சம் வேட்டிகள் விற்பனை ஆகின்றன. சர்வதேச விமான நிலையங்களிலும் இவரது வேட்டி ஷோரூம்கள் கடை விரிக்கப்பட்டு வெளிநாட்டவர்களும் இவரது கம்பெனி வேட்டியை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
ஓன்லைன் விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன. ராம்ராஜ் காட்டன் இப்போது 2,500 வகையான தோதிகளை உற்பத்தி செய்கிறது. அவர்கள் ஒரு பேஷன் ஷோவை ஏற்பாடு செய்தனர், அங்கு அனைத்து மாடல்களும் ஒரு பிரபலமான ஹோட்டலில் வெள்ளை சட்டை மற்றும் வேஷ்டி அணிந்திருந்தன.
Photo: S.Siva Saravanan
நாகராஜ் முன்னர் அளித்த பேட்டி
ஒருமுறை நாகராஜ் அளித்திருந்த பேட்டியில், ஆந்திராவில் ஒரு கடை முதலாளி எத்தனைமுறை போனாலும், எனக்கு ஆர்டர் தரமாட்டார். ஆனாலும், அவரைப் பார்த்து வணக்கம் சொல்லாமல் நான் வரவே மாட்டேன். ஒருநாள், ஏதோ கோபத்தில் இருந்தவர் என்னைப் பார்த்ததும் கடுமையாகத் திட்டிவிட்டார். `ஏன்யா, உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா?
வாட்ச்மேன்கிட்ட சொல்லி உன்னை உள்ளே விடக்கூடாதுனு சொன்னாதான் தொந்தரவு பண்றதை நிறுத்துவியா?' என்று ஒருமையில் பேசிவிட்டார். மிகப் பொறுமையாக நான் அவரிடம் சொன்னேன். `சார், நான் உங்களிடம் வந்து வணக்கம் சொல்லிட்டு ஆர்டர் எடுக்கப்போனா, நிறைய ஆர்டர் கிடைக்குது. நீங்க எனக்கு ஆர்டர் தரவே இல்லைன்னாலும் பரவாயில்லை. நான் உங்களுக்கு வணக்கம் சொல்வதை மட்டும் தயவுசெய்து தடுக்க வேண்டாம்'னு பணிவாகவும், பொறுமையாகவும் சொன்னேன்.
அவருக்கு கண் கலங்கிவிட்டது. அதற்குப் பிறகு எனக்கு 35 வருடங்களாக ஆர்டர் வழங்கி வருகிறார் என கூறினார்.
thehansindia