பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திரை துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை மாய்த்துக் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன்
தமிழ் திரைப்பட துறையின் பிரபல மற்றும் மூத்த தயாரிப்பாளரான கே.ராஜன் சென்னையில் உள்ள அடையாறு கூவம் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்பு துறையினர் ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது மரணம் குறித்து பொலிஸார் விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

85 வயதான தயாரிப்பாளர் கே.ராஜன் தமிழில் பல படங்களை தயாரித்துள்ளார்.
இயக்குநராகவும் இருந்த இவர் அஜித்தின் துணிவு உள்ளிட்ட 18 படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
பல்வேறு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த இவரின், வெளிப்படையான கருத்தும் துறை ரீதியான பேச்சும் பெரிதும் கவனிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் திடீரென உயிரை மாய்த்துக் கொண்டு இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |