இலங்கை தமிழ்ப்பெண்ணின் கனவு நிஜமானது! வறுமையை வென்று சாதித்து அசத்தல்
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியில் முதல் முறையாக தமிழ்ப்பெண்ணான சதாசிவம் கலையரசி இடம்பெற்றிருக்கிறார்.
கலையரசி கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவி ஆவார். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட கலையரசிக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதே கனவாக இருந்த நிலையில் தற்போது அது நிஜமாகியுள்ளது.
உள்ளூர் பயிற்சியாளரான ஜீவரத்தினம் ப்ரியதர்ஷன் தான் தொடர்ந்து கலையரசிக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்கிறார்.
#SriLanka: Growing up in her village in Sri Lanka’s northern Kilinochchi district, Sadasivam Kalaiyarasi had one dream — to play cricket for Sri Lanka.https://t.co/EHcZFCNhEo#lka via @the_hindu pic.twitter.com/STWfUpt4Q9
— Meera Srinivasan (@Meerasrini) June 12, 2022
வேகப்பந்து வீச்சாளரான அவர், சமீபகாலமாக துடுப்பாட்டத்திலும் அசத்தி வருகிறார். தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே கலையரசி தேசிய அணியில் தேர்வான செய்தி வந்திருக்கிறது.
குடும்ப வறுமையிலும் தந்தை மற்றும் பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தின் காரணமாகவும் தனது கடும் உழைப்பாலும் கலையரசி தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளார்.