தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்.
இசையமைப்பாளர் சபேஷ் மறைவு
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் சபேஷ். இவர் தனது சகோதரரான முரளியுடன் இணைந்து சபேஷ் - முரளி என்ற பெயரில் பல்வேறு தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் ஆவார்.
இவர்கள், சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
மேலும், சில படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளதோடு, தேவாவின் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார்.
கிட்னி பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |