வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் படைத்த சாதனை! 5 வயது சிறுவன் சாதனையாளர்
உலகிலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
கிளிமஞ்சாரோ
உலகில் உள்ள தனி மலைகளில் மிக உயரமான மலை கிளிமஞ்சாரோ ஆகும். இதன் மீது ஏறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
அவற்றில் மாச்சமே என்ற பாதையை மலை ஏற முயல்பவர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இதற்கு உடல் தகுதி என்பது மிகவும் அவசியம் ஆகும்.
ஏனெனில் உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவதற்கு எளிதாக கருத்தப்பட்டாலும் இந்த வழி பயணம் ஆபத்தானதாக கூறப்படுகிறது.
மூச்சு விடுவதல் சிரமம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவை மலை இருப்பவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
உலகிலேயே ஐந்து வயதில்
இந்த நிலையில்தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் உட்பட 10 பேர், கிளிமஞ்சாரோ சிகரம் மீது ஏறி சாதனை படைத்துள்ளனர். 
முத்தமிழ் செல்வி என்பவரின் தலைமையில், இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் 5,895 மீற்றர் உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் மீது ஏறியுள்ளனர்.
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதித்த முதல் தமிழ்பெண்தான் முத்தமிழ் செல்வி. அவரது வழிகாட்டுதலில் இந்த குழு ஏறியிருக்கிறது.
இந்த குழுவில் விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டியைச் சேர்ந்த சிவவிஷ்ணு என்ற 5 வயது சிறுவனும் அடங்குவார்.
இதன்மூலம் உலகிலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய மூன்றாவது சாதனையாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
அதேபோல், வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் உட்பட 5 சிறுவர்கள் என மொத்தம் 10 பேர் (பெற்றோர்களும்) கிளிமஞ்சாரோ சிகரம் மீது ஏறி சாதனை படைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[
]
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |