நிலவுக்குச் சந்திரயான் விடும் காலத்தில் இப்படியொரு தலைப்புச் செய்தியா? தமிழக முதலமைச்சர் கண்டனம்
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து தலைப்பிடப்பட்ட தனியார் நாளிதழுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விமர்சித்த நாளிதழ்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் உள்ள சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். இதற்கு பல்வேறு வரவேற்புகள் வந்தன.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) தனியார் நாளிதழ் ஒன்றில், காலை உணவு திட்டத்தை தரைகுறைவான தலைப்பில் விமர்சித்து குறிப்பிட்டிருந்தது. இது, சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மு.க.ஸ்டாலின் கூறியது
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்" என்று கூறியுள்ளார்.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |