தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
மேலும் அவரிகளின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை அடுத்த மாதம் ஏலத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதையடுத்து இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீன்பிடி படகுகள் ஏலம் விடுவது குறித்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது