இலங்கைக்கு தமிழக அரசு நிவாரணம்.., இன்று அனுப்பிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
டிட்வா புயலால் பாதிப்படைந்த இலங்கைக்கு, தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை கப்பல் மூலம் அனுப்புகிறார்.
இலங்கைக்கு நிவாரண பொருள்
டிட்வா புயல் பாதிப்புகளில் சிக்கி இலங்கையில் இதுவரை 330க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்.
இலங்கை பெரும் இயற்கை பேரிடரில் சிக்கிய சூழலில், இந்தியா உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்ள இலங்கைக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பியது.
இதனைதொடர்ந்து பல டன் நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரணப் பொருள்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்புகிறார்.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருக்கின்றன.

மேலும், 10,000 போர்வை, 10,000 துண்டு, 5000 வேட்டி, 5000 சேலை முதலியவற்றுடன் பருப்பு, சர்க்கரை, மாவு போன்றவையும் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பலை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |