பொங்கல் பண்டிகையின் பரிசுத் தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பையொட்டி, மக்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
வெளியிட்ட அறிவிப்பு..,
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199க்கும், கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999க்கும் விற்பனை செய்ய ஆணையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பெரும் பொங்கல் தொகுப்பில் அனைவருக்கும் 500 கிராம் நாட்டுச் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருட்களின் தொகுப்பினை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |