13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டண உயர்வை அறிவித்த அரசு
tamilnadu government increase auto fare: தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டண உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆட்டோ கட்டண உயர்வு

இதன்படி, குறைந்தபட்சமாக கட்டணமாக 50 ரூபாயும், குறைந்தபட்ச தூரம் 1.8 கிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், ரூ.25 கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை, வழக்கமான கட்டணத்தைவிட, 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்திற்கு, ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதைகளில் பயணிக்கும் போது, குறைந்தபட்சமாக கட்டணமாக 60 ரூபாயும், கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், ரூ.30 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்டோ கட்டண உயர்வை அறிவித்த தமிழக அரசு, முதல், 1.8 கி.மீ., துாரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.25 அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.12 என நிர்ணயித்தது
ஏற்கனேவே ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவே பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதேவேளையில், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கும் வெற்றி பயண திட்டத்தால் பெண் பயணிகள் ஆட்டோ பயணத்தை தவிர்ப்பதால், கட்டணத்தை உயர்த்தியும் பலனில்லை என சில ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.