இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக உதவி பொருட்கள்: தமிழக அரசு திட்டம்
பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு உதவ இரண்டாம் கட்டமாக தமிழக அரசு பொருட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைக்கு உதவ தமிழக அரசு சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் 15 கோடி மதிப்பிலான பால் பவுடர் ஆகிய அத்தியாவசிய பொருட்கள், சென்னை துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து உதவி பொருட்களை தமிழக அரசு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
அடுத்த வாரம் இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.