தமிழகம் முழுவதும் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
மொத்தம் பள்ளி மாணவ-மாணவிகள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 பேரும் என இந்தத் தேர்வை 8,27,475 பேர் எழுதுகின்றனர்.
மொத்தம் 7,545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 3,412 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 26ஆம் திகதி வரை நடைபெறும்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 4,540 பறக்கும் படையினர் கண்காணிக்கின்றனர். மேலும் 44,624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 14417, 94983 83075, 94983 83076 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |