சவுதியில் ஈழத்தமிழருக்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் வலுக்கும் ஆதரவு
tamil nadu raises voice to save anojan from death sentence in saudi arabia: சவுதி அரேபியாவில் ஈழத்தமிழரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
சவுதியில் ஈழத்தமிழருக்கு மரண தண்டனை
சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் குறித்து சமூக ஊடகத்தில் செய்த கமெண்ட் தொடர்பாக அவர் பணியாற்றிய நிறுவனத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இணையக் குற்றச் சட்டப்பிரிவின் கீழ், அனோஜனுக்கு அதிகபட்ச தண்டனையாக கடந்த ஜூலை 15 ஆம் திகதி அன்று அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது ஷரியா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர சவுதி அரேபியாவின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று மதம் குறித்து இழிவாக கருத்து தெரிவித்த அனோஜனுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அனோஜனை காப்பாற்ற அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆதரவு
இந்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென இலங்கை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் குரல் எழுந்துள்ளது.
அனோஜன் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாகவே கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டமையினால், அவரை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்! சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும். ‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும். ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 13, 2026

இலங்கை தமிழரான சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து மீட்குமாறு தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Wrote a letter to Hon’ble External Affairs Minister @DrSJaishankar seeking the Government of India’s diplomatic intervention to save 24-year-old Sri Lankan Tamil Hindu engineer Anojan Sivarasa, who is facing the death penalty in Saudi Arabia. சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 24 வயது ஈழத் தமிழ் இந்து திரு.அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றக் கோரி, மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெயசங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். @narendramodi @blsanthosh @rammadhav_ @NainarBJP @BJP4TamilNadu #SaveAnojanSivarasa #JusticeForAnojan
— Dr.SG Suryah (@SuryahSG) October 12, 2026

அதைத்தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென குரல் எழுப்பியுள்ளார்.
Stand Together to Save a Young Sri Lankan Tamil Life A 24 year old Sri Lankan Tamil Hindu engineer, Anojan Sivarasa, has been sentenced to death in Saudi Arabia over an online comment. Provoked by insults against his faith, he posted an impulsive reply, realized his mistake, deleted it immediately, and issued a public apology. However the deleted comment was translated and reported to his employer in Saudi Arabia. News reports indicate that following an initial sentence, the death penalty was demanded. He has reportedly faced assaults in prison, and all contact with his family was cut off on Sep 28. Given that the young man promptly recognized his lapse and offered an unconditional public apology, the death sentence must be revoked immediately. We urge the Government of India, Government of Sri Lanka, and the international community to intervene urgently on humanitarian grounds and appeal for clemency. Capital punishment in this case is completely unjustifiable, and conscience-driven citizens across the world must unite and rise their voices to demand the cancellation of this death penalty. The final deadline to appeal is October 17, 2026. Sentencing a young man to death despite an immediate retraction and apology is disproportionate and cruel. Raise your voice before time runs out. Stand Together to Save a Young Sri Lankan Tamil Life! இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன்றிணைவோம்! சவூதி அரேபியாவில் இணையத்தள பின்னூட்டம் ஒன்றிற்காக அநோஜன் சிவராசா என்ற 24 வயது இலங்கைத் தமிழ் பொறியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் வணங்கும் கடவுளை அவமதிக்கும் வகையில் வந்த பதிவுகளால் உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்ட அவர், உடனடியாகத் தனது தவறை உணர்ந்து, அப்பதிவை நீக்கியதோடு பகிரங்க மண்ணிப்பும் கோரினார். ஆனாலும், நீக்கப்பட்ட அப்பதிவு மொழிபெயர்க்கப்பட்டு சவூதி அரேபியாவில் அவர் பணி புரியும் நிறுவனத்திற்கு புகாரளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை மற்றும் தண்டனையைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் சிறையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் குடும்பத்துடனான அவரது அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இளைஞர் உடனடியாகத் தனது தவறை உணர்ந்து பகிரங்க மண்ணிப்புக் கோரியுள்ள நிலையில், இந்த மரண தண்டனை உடனடியாக ரத்து செய்யப்பட வெண்டும். இந்திய அரசு, இலங்கை அரசு, மற்றும் உலக நாடுகள் இணைந்து மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரண தண்டனை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட உலகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். மேல்முறையிடு செய்வதற்கான இறுதிக் கெடு அக்டோபர் 17 ஆம் தேதி ஆகும். தவறை உணர்ந்து மண்ணிப்புக் கோரியப் பிறகும், ஓர் இளைஞருக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரமானது மற்றும் தகுதியற்றது. காலம் கடந்து போவதற்குள் அனைவரும் குரல் எழுப்புவோம். இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன்றிணைவோம்! @PMOIndia @MEAIndia @DGISriLanka @PMDNewsGov @anuradisanayake @amnesty #JusticeForAnojan #AnojanSivarasa
— S.P. Velumani (@SPVelumanicbe) October 12, 2026