தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்... மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி: யார் இந்த ராதா வேம்பு
மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் ராதா வேம்பு, மென்பொருள் நிறுவனமான Zoho-வின் இணை நிறுவனர் ஆவார்.
ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி
தமிழகத்தில் பெண் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருக்கும் ராதா வேம்பு Zoho நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ஆவார்.
Zoho நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 19,000 கோடி என்றே கூறப்படுகிறது. இதனால் மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ராதா வேம்பு அறியப்படுகிறார்.
Zoho நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புவின் பங்கு வெறும் 5 சதவீதம் என்றே கூறப்படுகிறது. ஆனால் ராதா வேம்பு 47.8 சதவீத பங்கினை கொண்டுள்ளார். 2022ல் மட்டும் Zoho நிறுவனத்தின் வருவாய் என்பது 2,700 கோடி என்றே கூறப்படுகிறது.
Zoho கார்ப்பரேஷன்
சென்னையில் பிறந்த ராதா வேம்பு, ஐஐடி மெட்ராஸில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1996ல் தமது உயர் கல்வியை தொடரும் போது தமது சகோதரர் ஸ்ரீதர் வேம்பு உடன் இணைந்து AdvenNet என்ற மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
இந்த நிறுவனமே பின்னர் Zoho கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் பெற்றது. 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ராதா வேம்புவின் மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |