விடுமுறையில் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழகத்தில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் கடந்த செவ்வாய்கிழமை முடிவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிவடைந்த பின், பள்ளிகள் ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.
விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான கூடுதல் அல்லது சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்களை நீர்நிலைகளுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விடுமுறை நாட்களில் மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்க்க பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |