2021 பிறக்க போகும் பிலவ வருடப்பிறப்பு! சுபநேரங்கள், கிரப்பெயர்ச்சிகள் எப்படி இருக்கும்?
ஏப்ரல் மாதம் 14ம் திகதி, புதன்கிழமை, சித்திரை 1ம் திகதி மங்களகரமான பிலவ தமிழ் வருடம் பிறக்கிறது.
இப்புதுவருடத்தில் சுபநேரங்கள் என்ன? கிரகப்பெயர்ச்சிகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
புது வருடப்பிறப்பு
வாக்கிய பஞ்சாங்கம் - 14 - 04 -2021
புதன் கிழமை அதிகாலை 1.39
திருக்கணித பஞ்சாங்கம் - 14 - 04 -2021
புதன்கிழமை அதிகாலை 2.31
மருத்துநீர்
வாக்கிய பஞ்சாங்கம்
13-04-2021 14 - 04 -2021 இரவு 9.39 முதல் அதிகாலை 5.39 வரை
திருக்கணித பஞ்சாங்கம்
13-04-2021 14 - 04 -2021 இரவு 10.23 முதல் அதிகாலை 6.23 வரை
அணியும் ஆடைகள்
நீலம், சிவப்பு பட்டாடை அல்லது நீலம் , சிவப்பு கரையுள்ள பட்டாடைகள்
அணியும் ஆபரணங்கள்
நீலம், பவளம் பதித்த ஆபரணங்கள்
சந்திர தோச நட்சத்திரங்கள்
- அஸ்வினி,
- பரணி,
- கார்த்திகை (1ம் பாதம்),
- பூரம், உத்திரம் ( 2ம், 3ம், 4ம் பாதம்),
- அத்தம், சித்திரை (1ம், 2ம் பாதம்),
- பூராடம்.
கிரகப் பெயர்ச்சிகள்
ராகு – கேது பெயர்ச்சி
- பிலவ வருடத்தில் பங்குனி மாதம் ராகு-கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
- பங்குனி மாதம் 7-ம் திகதி (21.3.2022), திங்கள்கிழமை அன்று மதியம் 2:52 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்கிறார்.
- கேது பகவான் விருச்சிகத்திலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார்.
குருப்பெயர்ச்சி
- குருபகவானின் வக்ர பெயர்ச்சி இந்த பிலவ வருடம் ஆவணியில் நிகழ்கிறது.
- அதாவது, ஆவணி மாதம் 29-ம் நாள் (14.9.2021) செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 9:48 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசிக்கு (வக்ர பெயர்ச்சி) குருபகவான் பெயர்ச்சி ஆகிறார்.
- அதேபோல், ஐப்பசி மாதம்-27 (13.11.2021) சனிக்கிழமை அன்று மாலை 6:10 மணிக்கு, அவிட்டம் 3-ம் பாதம் கும்ப ராசிக்குப் பெயர்கிறார்.
- அதேபோல், பங்குனி-30 (13.4.2022) புதன்கிழமை அன்று நள்ளிரவுக்குப் பிறகு (விடிந்தால் வியாழன்) 4:09 மணிக்கு பூரட்டாதி 4-ம் பாதம் மீன ராசிக்குப் பெயர்கிறார்.
சனிப்பெயர்ச்சி
இந்தப் பிலவ வருடத்தில் சனிப்பெயர்ச்சி இல்லை.